< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை பரவை பகுதியில் இன்று மின்தடை
|19 Oct 2023 5:13 AM IST
மதுரை பரவை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அலங்காநல்லூர் பீடரில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் பரவை, கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரிகார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.