திருச்சி
மணப்பாறை, திருச்சி நகர பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
|மணப்பாறை, திருச்சி நகர பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மணப்பாறை துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட் பொயைக்கப்பட்டி, வீரப்பூர், கொட்டபட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகால மில் பழையகாலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு குடிநீர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி, வீராகோவில்பட்டி, பாலக்கருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), மணப்பாறை, கலிங்கபட்டி, முள்ளிபாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம்கோவில்பட்டி, தோப்புபட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான டி.எஸ்.பி. கேம்ப், செட்டியபட்டி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சல நகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர், அன்பிலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் திருச்சி நகரியம் கோட்டம் பொன்னகர் பிரிவுக்குட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கருமண்டபம் மெயின்ரோடு, அமுதம் ஓட்டல் முதல் மாதாகோவில் வரை மற்றும் கல்யாண சுந்தரம்நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.