மதுரை
மதுரை சோழவந்தான், பேரையூர் பகுதியில் மின்தடை
|மதுரை சோழவந்தான், பேரையூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் சோழவந்தான், தச்சம்பத்து இரும்பாடி, மீனாட்சி நகர், மேலகால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழ மட்டையான், மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிபள்ளம், மன்னாடிமங்கலம், தாமோதரன் பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் எழுமலை மற்றும் சின்ன கட்டளை பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதன்படி எழுமலை, சூலப்புரம், எம்.கல்லுப்பட்டி, அய்யம்பட்டி, மல்லபுரம், துள்ளுக்ககுட்டிநாயக்கனூர், இ.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, ராஜகாபட்டி, ஏ.பெருமாள் பட்டி, மானூத்து, ஜோதில்நாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சேடப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, பொம்மனம்பட்டி, பெரிய கட்டளை, சின்ன கட்டளை, கண்ணியம்பட்டி, பெருங்காமநல்லூர், பரமன்பட்டி, சென்னம்பட்டி, குடிச்சேரி, தொட்டனம்பட்டி, அத்திபட்டி, சாப்டூர், பேரையூர், வீரணம்பட்டி பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார துறையினர் அறிவித்துள்ளனர்.