< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஈசநத்தம் பகுதியில் மின்நிறுத்தம்
|15 July 2023 11:05 PM IST
ஈசநத்தம் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, ஈசநத்தம், சந்தைப்பேட்டை, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி (டவுன்பகுதி), கொத்தபாளையம், கரடிபட்டி, பெரியவலையபட்டி, ஆர்.பி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 18-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.