< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை
|20 Jun 2023 12:15 AM IST
பராமரிப்பு பணி காரணமாக தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
தேவகோட்டை,
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே தேவகோட்டை பீட்டர்ஸ் காலனி, துணை சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்ற குடியிருப்பு வளாகம், ராம்நகர் முதல் வீதி முதல் 7-ம் வீதி வரை, சிவகங்கை ராஜா ரோடு, விஸ்வநாத நகர், தாணிச்சாவூரணி ரோடு, ஹவுசிங் போர்டு, கண்டதேவி தாழையூர் ரோடு, அருணகிரிபட்டினம், நேரு தெரு, சிவன் கோவில், செப்பவயலார் தெரு, இரவுசேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.