திருச்சி
புத்தாநத்தம், அன்பில் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
|புத்தாநத்தம், அன்பில் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மணப்பாறை, ஜூலை.19-
புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புத்தாநத்தம், இடையபட்டி காவல்காரன்பட்டி, பூங்குருணிப்பட்டி, கனவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், பெருமாம்பட்டி, தாதமலைப்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, பிள்ளையார்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அலங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்கம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி, மாங்கனாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதேபோல் லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் அன்பில் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்யப்பட இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை காட்டூர், கொத்தமங்களம், கொன்னைக்குடி, ஆதிகுடி, நடராஜபுரம், ஜங்கமராஜபுரம், அன்பில், மங்கம்மாள்புரம், பருத்திக்கால், குறிச்சி, மேட்டுப்பட்டி, ராமநாதபுரம், சிறுமயங்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.