ராமநாதபுரம்
ஆனந்தூர், நயினார்கோவில் பகுதியில் இன்று மின்தடை
|ஆனந்தூர், நயினார்கோவில் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்தடை ஏற்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆனந்தூர், நயினார்கோவில் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்தடை ஏற்படுகிறது.
பராமரிப்பு பணி
ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இதுபோல் உப்பூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, சித்தூர்வாடி, அடந்தனார் கோட்டை, காவனூர், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 10 மணி மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நயினார்கோவில்
பரமக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து இயங்கும் சத்திரக்குடி மின்பாதையில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நயினார்கோவில் பிரிவிற்கு உட்பட்ட நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, தாளையடிகோட்டை, பகைவென்றி, அக்கிரமேசி, பாண்டியூர், எஸ்.வி.மங்களம், அ.காட்சன், உதயகுடி, நகரம், அரியாங்கோட்டை, வாதவனேரி, மற்றும் சத்திரக்குடி பிரிவில் சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிழக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியநேந்தல் ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினிேயாகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.