< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் இன்று 2 இடங்களில் மின்தடை
|19 Aug 2024 8:16 AM IST
சென்னையில் இன்று 2 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை,
மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் அடையாறு, ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அடையாறில், 1-வது அவென்யூ சாஸ்திரி நகர், எல். பி. சாலையின் ஒரு பகுதி, பரமேஸ்வரி நகர் பகுதி, பத்மநாபா நகர் 1 மற்றும் 3-வது தெரு மற்றும் ஆதம்பாக்கத்தில் சோலையப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்.பி.ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எனவே மின் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.