< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் வயர்கள்
|4 Jan 2023 1:24 AM IST
சாலையின் குறுக்கே தாழ்வாக மின்வயர்கள் செல்கின்றன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து உட்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பெரியவளத்திற்கு இடையே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் ஜெயங்கொண்டம் உட்கோட்டைக்கு மினி பஸ்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுவதற்காக டிராக்டர்கள் மற்றும் தைல மர கட்டைகள் ஏற்றுவதற்கு லாரிகள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்தநிலையில் அந்த சாலையின் குறுக்கே செல்லும் மின் வயர்கள் தாழ்வாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரி, பஸ்கள் மீது மின்கம்பிகள் உரசினால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உயிர் பலிகளை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அந்த மின் வயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டினர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.