< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி; திருவனந்தபுரம், பெங்களூரு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் - பயணிகள் அவதி
மாநில செய்திகள்

தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி; திருவனந்தபுரம், பெங்களூரு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் - பயணிகள் அவதி

தினத்தந்தி
|
24 Dec 2022 6:40 PM IST

சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் இருந்து கோயம்புத்தூரை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூர் அருகே திருவாலங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனைக் கண்ட எஞ்ஜின் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு அந்த ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து அறுந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை முடித்த பின்னர் ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்