< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை மின்தடை
|8 Sept 2023 6:07 PM IST
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பாப்பன்குப்பம், சிந்தலகுப்பம், சித்தராஜகண்டிகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் ஆகும். இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.