< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
இன்றும், நாளையும் மின்நிறுத்தம்
|19 Oct 2023 12:15 AM IST
வேதாரண்யம் பகுதியில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் காந்திநகர், வள்ளியம்மை சாலை, ஆறுகாட்டுத்துறை, தோப்புத்துறை, தேத்தாக்குடி தெற்கு, புஷ்பவனம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) தேத்தாகுடி வடக்கு, தேத்தாக்குடி தெற்கு, கத்தரிப்புலம், தாமரைப்புலம், செம்போடை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.