கடலூர்
கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
|கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் செம்மண்டலம், கோண்டூர், சாவடி, உச்சிமேடு, நாணமேடு, பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகிய நத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், கலையூர், இராண்டாயிர வளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி அகரம், நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் பண்ருட்டி அடுத்த ஒறையூர் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லூர்பாளையம், வாணியம்பாளையம், பட்டுக்கோட்டை, திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர், குறத்தி, சின்னப்பேட்டை, அழகு பெருமாள் குப்பம், அரியலூர், பைத்தாம்பாடி, பைத்தாம்படி சத்திரம், காவனூர், பூண்டி நத்தம், மனம்தவிழ்ந்தபுத்தூர், மேல்அருங்குணம், அக்கடவள்ளி, வேலங்காடு, ராயர் பாளையம், மணப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நெல்லிக்குப்பம் லீனா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.