< Back
மாநில செய்திகள்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
25 July 2023 12:15 AM IST

மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை எதிரே புளியமரம் ஒன்று உள்ளது. அந்த புளியமரத்தின் கிளைகள் நேற்று முறிந்து அந்த வழியாக சென்ற மின்கம்பியில் விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டு, சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து, ராட்சத எந்திரத்தின் உதவியுடன் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் கடைக்காரர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்