< Back
மாநில செய்திகள்
புயல் கரையை கடக்கும் போது மின் தடை  - ராஜேஷ் லக்கானி பேட்டி
மாநில செய்திகள்

புயல் கரையை கடக்கும் போது மின் தடை - ராஜேஷ் லக்கானி பேட்டி

தினத்தந்தி
|
9 Dec 2022 6:43 PM IST

புயல் கரையை கடக்கும் போது தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்யப்படும் என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

சென்னை,

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்த நிலையில் இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. வங்கககடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 13 லிருந்து 14 கி.மீ அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன.தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்