< Back
மாநில செய்திகள்
இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

தினத்தந்தி
|
9 May 2023 12:15 AM IST

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை மற்றும் மறவமங்கலம் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.


சிவகங்கை, நாட்டரசன் கோட்டை மற்றும் மறவமங்கலம் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை மீனாட்சி நகர், மதுரை ரோடு, மதுரை முக்கு, திருப்பத்தூர் ரோடு, சாஸ்திரி 1-வது தெரு, 2-வது தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, பாரதி நகர் ஏரியா, காமராஜர் வீதி, காளவாசல், வசந்தம் தெரு, நெல் மண்டி தெரு, வேலாயுத சுவாமி கோவில் தெரு, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோல் நாட்டரசன் கோட்டை உயர் அழுத்த மின் பாதையில் உள்ள நாட்டரசன் கோட்டை, நரி கோட்டை, கீரனூர், முத்தூர், மேப்பல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மறவமங்கலம்

மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குண்டா குடை, உசிலங்குளம், சிலுக்கபட்டி, அஞ்சம்பட்டி, சாக்கூர், தொண்டியூர், காஞ்சாராம், பழுவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்