< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கம்பம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
|27 April 2023 2:30 AM IST
கம்பம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கம்பம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.