ராமநாதபுரம்
கமுதி, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை
|கமுதி, திருவாடானை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கமுதி
கமுதி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், கமுதி நகர், செங்கப்படை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட இடங்களில் இன்று( வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரைமின் வினியோகம் தடை செய்யப்படுவதாக தகவல் தெரிவித்தார். இந்த தகவலை கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார். திருவாடானை, தொண்டி நகரிக்கத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் திருவாடானை, சி.கே.மங்கலம், ஓரிக்கோட்டை டி.நாகனி, தொண்டி, தினையத்தூர், திருவெற்றியூர், பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம், ஓரியூர், வெள்ளையபுரம், என்.மங்கலம், கட்டிவயல், ஆண்டாவூரணி, மங்கலக்குடி, பாண்டுகுடி, நம்புதாளை, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இதை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.