< Back
மாநில செய்திகள்
13-ந்தேதி மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

13-ந்தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
10 Oct 2023 3:21 AM IST

தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் பகுதியில் 13-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சையை அடுத்த பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் ஆகிய 2 துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வளமர்கோட்டை, ஆர்.சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்