< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மின்வாரிய குறைதீர்க்கும் முகாம்
|31 July 2023 1:15 AM IST
திண்டுக்கல்லில் மின்வாரியம் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
திண்டுக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இந்த கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் கலந்துகொண்டு மின் பயனீட்டாளர்களிடம் குறைகளை கேட்டு தீர்வு அளிக்க உள்ளார். எனவே மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.