< Back
மாநில செய்திகள்
மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
திருச்சி
மாநில செய்திகள்

மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

தினத்தந்தி
|
8 Oct 2023 1:14 AM IST

மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் திருச்சி மண்டல செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் சேக்கிழார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5,387 கள பணியாளர்களை (கேங்மேன்) பணிநியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தின ஊதியத்தை ரூ.587 ஆக வழங்குவதுடன், மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின் கம்பங்களில் அரசு கேபிள் ஒயர்களை கொண்டு செல்வதால் பராமரிப்பு மற்றும் பணிகளை செய்ய முடியாமல் விபத்து ஏற்படுவதை தடுக்க கேபிள் ஒயர்களை மின் கம்பத்தில் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மின் இணைப்புக்கான ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திருச்சி சிவசெல்வன், புதுக்கோட்டை குமார், பெரம்பலூர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி பெருநகர வட்ட தலைவர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்