< Back
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர் மகனுக்கு ரூ.1¼ லட்சம் வழங்க வேண்டும் காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர் மகனுக்கு ரூ.1¼ லட்சம் வழங்க வேண்டும் காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:15 AM IST

மின்வாரிய ஊழியரின் மகனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு ரூ.1¼ லட்சத்தை காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும், மேலும் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில்,

காப்பீடு நிறுவனம்

மார்த்தாண்டம் திக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார், மின்வாரிய ஊழியர். இவருடைய மகனுக்கு கையில் வலி ஏற்பட்டதால் நாகர்கோவில், கோவை, வேலூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக செலவான தொகையை கொடுக்கும்படி தான் காப்பீடு செய்த நிறுவனத்திடம் கேட்டார். ஆனால் அந்த நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணம் தர மறுத்தது. எனவே வக்கீல் மூலமாக சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகும் எந்த பதிலும் வரவில்லை.

அபராதம்

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 150 மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் அந்த நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்