< Back
மாநில செய்திகள்
மின்சார சிக்கன வாரவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

மின்சார சிக்கன வாரவிழா

தினத்தந்தி
|
19 Dec 2022 11:48 PM IST

மின்சார சிக்கன வாரவிழா நடந்தது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் துணை மின் நிலையம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பள்ளி தம்மம் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது. ஓவியம், கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும்விழா பள்ளி தாளாளர் அருள் தந்தை ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. காளையார் கோவில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி பரிசு வழங்கி பாராட்டினார். உதவி செயற்பொறியாளர் அன்புநாதன், மாணவர்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தரமான மின் சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், பாதுகாப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும் என பேசினார். காளையார்கோவில், மறவமங்கலம், நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மின்சாரம் சேமிப்பது விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினார். காளையார்கோவில் உதவி பொறியாளர் தியாகராஜன், மறவ மங்கலம் உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்