< Back
மாநில செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
அரியலூர்
மாநில செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

தினத்தந்தி
|
4 Jun 2023 12:00 AM IST

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. இதில், மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்