< Back
மாநில செய்திகள்
பவுர்ணமி கிரிவலம்: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 ஏ.சி. பஸ்கள் இன்று இயக்கம்
மாநில செய்திகள்

பவுர்ணமி கிரிவலம்: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 ஏ.சி. பஸ்கள் இன்று இயக்கம்

தினத்தந்தி
|
26 Dec 2023 7:30 AM IST

கிரிவலம் செல்லும் பக்தர்கள் பஸ் வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்றுவர ஏதுவாக சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை, படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் 26-ந் தேதி (இன்று) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in, மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலி(ஆப்), ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்