பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு நாளை 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிமிடெட் வேலூர் மண்டலம், பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை 01.08.2023 பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிமிடெட், வேலூர் மண்டலம் சார்பில் அன்று சென்னையிலிருந்து 30 சிறப்பு பேருந்துகள், வேலூரிலிருந்து 50 சிறப்பு பேருந்துகள், திருப்பத்தூரிலிருந்து 30 சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காட்டிலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.