< Back
மாநில செய்திகள்
கொட்டித் தீர்த்த கோடை மழை
தேனி
மாநில செய்திகள்

கொட்டித் தீர்த்த கோடை மழை

தினத்தந்தி
|
9 May 2023 12:30 AM IST

தேனியில் கோடை மழை கொட்டி தீர்த்தது.

தேனியில் நேற்று மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது. 1 மணி நேரத்துக்கும் மேல் இந்த பலத்த மழை நீடித்தது. தொடர்ந்து இரவில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டித் தீர்த்த கோடை மழையால் என்.ஆர்.டி. நகர், பாரஸ்ட்ரோடு, மதுரை சாலை பகுதியில் பெய்த மழை நீர் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து பங்களாமேடு திட்டச்சாலை சந்திப்பு நோக்கி ஓடியது. அங்கு சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. அதுபோல், பங்களாமேடு ராஜவாய்க்கால் தூர்ந்து கிடப்பதால் மழை வெள்ளம் செல்ல வழியின்றி வாய்க்கால் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தேனி கே.ஆர்.ஆர். நகர், என்.ஆர்.டி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 1 மணி நேரத்துக்கும் மேல் மின்தடை நீடித்ததால் இரவில் மக்கள் மின்சாரம் இன்றி பரிதவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்