< Back
மாநில செய்திகள்
கொட்டித்தீர்த்த மழை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை

தினத்தந்தி
|
6 May 2023 6:45 PM GMT

நாகை, கீழ்வேளூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நாகையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு 8 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதையடுத்து 8.30 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் ெகாட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் நாகை அருகே கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகள், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்