< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு
|21 May 2023 11:50 AM IST
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் நாளை நடைபெற இருந்தது.
இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இந்த தகவலை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.