< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு
|27 Dec 2023 12:19 PM IST
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03/ 2023 மற்றும் 03ஏ 2023ன் படி (07.01.2024) அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. (07.01.2024) அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்வுக்கான நுழைவு சீட்டினை (04.02.2024) அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.