< Back
தமிழக செய்திகள்
புதிய சூப்பிரண்டு பதவி ஏற்பு
மதுரை
தமிழக செய்திகள்

புதிய சூப்பிரண்டு பதவி ஏற்பு

தினத்தந்தி
|
1 April 2023 12:35 AM IST

மதுரை மத்திய சிறைக்கு புதிய சூப்பிரண்டு பதவி ஏற்பு ஏற்றார்.

மதுரை, ஏப்.1-

மதுரை மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி சிறைகள் உள்ளன. மொத்தமாக இங்கு 1600-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் இங்கு பணியாற்றிய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்தகண்ணன் திருச்சி மத்திய சிறைக்கும், நிர்வாக அலுவலர் தியாகராஜன் வேலூர் சிறைக்கும் மாற்றப்பட்டனர். அதே நேரத்தில் திருச்சி சிறையில் இருந்து பரசுராம் மதுரை சிறை சூப்பிரண்டாக (பொறுப்பு) மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று மதுரை மத்திய சிறையில் சிறை சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார். அவரிடம் முன்னாள் சிறை சூப்பிரண்டு வசந்தகண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்