நாகப்பட்டினம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வாயிற்கூட்டம்
|பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர்.
வெளிப்பாளையம்:
நாகையில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் பத்மநாதன், மாநில உதவிபெறும் பள்ளி செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கல்வி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். இதில் மாநில துணைத் தலைவர் குமார், கல்வி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.