< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
28 Aug 2022 12:26 AM IST

மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி தொடங்கி வைத்து, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். அந்த மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்வதற்கு வழிகாட்டி, அறிவுரை வழங்கி சேர்க்க வேண்டும். முடிந்தவரை அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும், என்றார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பு ஆசிரியர்கள் இளஞ்செழியன், ரவிச்சந்திரன், தர்மலிங்கம் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் வழிகாட்டுதல் விளக்கங்களை அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்