< Back
மாநில செய்திகள்
அமைச்சர் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
கரூர்
மாநில செய்திகள்

அமைச்சர் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:10 AM IST

மத்திய அரசை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 13-ந்தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் மத்திய அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில்பாலாஜியை விடுதலை செய்யக்கோரியும், தி.மு.க., ம.தி.மு.க., கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கரூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்