< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்

தினத்தந்தி
|
29 Jun 2022 8:01 PM IST

வத்தலக்குண்டு பகுதியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம், காளியம்மன் கோவில் பகுதி ஆகிய இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆரின் பித்தன், அம்மாவின் பக்தன் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒற்றுமையே பலம், ஒற்றை தலைமை பலவீனம் என்ற வாசகங்களும் உள்ளன. இந்த போஸ்டர்களால் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்