< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

தினத்தந்தி
|
20 Jun 2022 10:53 PM IST

ஆண்டிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து தங்களது ஆதரவை ெதரிவித்தனர். இதையடுத்து ஆண்டிப்பட்டி பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் "கடைக் கோடி தொண்டர்களின் தலைவனே, ஒற்றை தலைமை ஏற்க வா எடப்பாடியாரே" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டா்கள் ஒட்டப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்