< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து போஸ்டர்
|11 Dec 2022 11:35 AM IST
ரஜினிகாந்தை திருவள்ளுவர் போன்று சித்தரித்து, அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரை,
ரஜினிகாந்தை திருவள்ளுவர் போன்று சித்தரித்து, அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். டிசம்பர் 12-ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில், ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்தை திருவள்ளுவர் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், அந்த போஸ்டரில் "அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.