< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|19 Oct 2022 12:15 AM IST
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க 3-ம் பிரிவு, தபால்காரர்கள் சங்கம், கிராமப்புற தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அஞ்சல் ஊழியர்கள் 3-ம் பிரிவு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயல் தலைவர் சாகுல்அமீது, கோட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தபால் துறை இன்சூரன்ஸ் சம்பந்தமான இணையதள பாதிப்பை அஞ்சல் துறை நிர்வாகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு தாமதமின்றி பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.