< Back
மாநில செய்திகள்
தபால் துறை குறைதீர்வு கூட்டம்: நாளை நடக்கிறது
மாநில செய்திகள்

தபால் துறை குறைதீர்வு கூட்டம்: நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
2 Nov 2022 1:34 AM IST

இந்திய தபால் துறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

சென்னை,

இந்திய தபால் துறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள பொது தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

சென்னை பொது தபால் (ஜென்ரல் போஸ்ட் ஆபீஸ்) அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் தபால் சேவைகள் குறித்த ஆலோசனைகள், குறைகள் ஏதேனும் இருந்தால் வாடிக்கையாளர்கள் நேரில் கலந்து கொண்டு அல்லது கடிதம் மூலமாக தங்கள் ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை பொது தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்