< Back
மாநில செய்திகள்
கொரோனாவிற்கு பின் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஏற்றத்தில் விமான போக்குவரத்து துறை
மாநில செய்திகள்

கொரோனாவிற்கு பின் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஏற்றத்தில் விமான போக்குவரத்து துறை

தினத்தந்தி
|
12 Feb 2023 2:40 AM IST

கொரோனா பாதிப்புக்கு பின் முதன் முறையாக விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா பாதிப்புக்கு பின் முதன் முறையாக ஜனவரி மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் இருந்து12 ஆயிரத்து 380 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் அதில் 17 லட்சத்தி 61 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்ததாகவும், இதுவே ஒரு புதிய சாதனை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்