நாமக்கல்
மொளசியில்கரும்பு விவசாயிகள் தபாலில் மனு அனுப்பும் போராட்டம்
|பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபாலில் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. சங்கத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு 2022-2023-ம் ஆண்டுக்கு மாநில அரசு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். அதிகரித்து வரும் கரும்பு வெட்டு கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்படும் வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே கொடுத்துவிட்டு, கரும்பு கிரைய பணத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பு போராட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட மனு தபாலில் அனுப்பப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.