< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே சாலையில் விழுந்த மின்கம்பத்தால் பரபரப்பு
|3 Aug 2022 10:20 PM IST
வேப்பனப்பள்ளி அருகே சாலையில் விழுந்த மின்கம்பத்தால் பரபரப்பு
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி- வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் குட்டப்பள்ளி கிராமம் அருகே சாலையோரம் மரம் ஒன்று சாய்ந்து அருகே உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் சாலையோரம் இருந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தது. அருகில் இருந்த கடைகளில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி மின்கம்பிகளை அகற்றினர். இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.