< Back
மாநில செய்திகள்
சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திருப்பூர்
மாநில செய்திகள்

சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
25 July 2022 11:26 PM IST

உடுமலை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்

போடிப்பட்டி, ஜூலை.26-

உடுமலை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்

உடுமலையை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அந்த சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் போடிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ் (வயது 22) தொழிலாளியான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். உடுமலையிலுள்ள கோவிலின் முன்பு வைத்து அந்த சிறுமிக்கு தாலிகட்டியுள்ளார். பின்னர் சிறுமியை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு அழைத்துச் சென்று கணவன்-மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து லோகேசை குழந்தை திருமணச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்