< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வழக்கு
|23 July 2023 12:15 AM IST
கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலபெருவிளை பகுதியில் தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே தடையை மீறி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 3-வது வார்டு கவுன்சிலர் அருள் சபிதா உள்பட 20 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.