< Back
மாநில செய்திகள்
பூணூல் அணியும் விழா
மதுரை
மாநில செய்திகள்

பூணூல் அணியும் விழா

தினத்தந்தி
|
31 Aug 2023 3:23 AM IST

மதுரையில் பூணூல் அணியும் விழா நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரத்தை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆவணி அவிட்டத்தையொட்டி நேற்று பல்வேறு தரப்பினரும் பூணூல் மாற்றிக்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் பூணூல் அணியும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விஸ்வகர்மா காயத்ரி மந்திரம் ஓத, விழாவில் கலந்துகொண்டவர்கள் பூணூல் மாற்றிக்கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்