< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
|5 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் விரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.