< Back
மாநில செய்திகள்
அமாவாசையையொட்டி   பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

அமாவாசையையொட்டி பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
23 Nov 2022 6:45 PM GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி பாண்டமங்கலம்‌ அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயியம்மன், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், ‌‌நன்செய் இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில் உள்ளிட்ட அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்