< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
|10 Oct 2022 12:14 AM IST
பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் மற்றும் குலதெய்வ கோவில்களில் உள்ள அம்மனுக்கு புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி வேலூர் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன், பேட்டை பகவதியம்மன், புதுமாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குலதெய்வ அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர்.