< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசையையொட்டி  மோகனூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி மோகனூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
26 Sept 2022 12:15 AM IST

மகாளய அமாவாசையையொட்டி மோகனூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை

மோகனூர்:

மோகனூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதன்படி நாவலடியான் கோவில், அசலதீபேஸ்வரர் கோவில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், காந்தமலை முருகன் கோவில், காளியம்மன் கோவில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில் எஸ்.வாழவந்தியில் உள்ள மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்களில் சாமிகளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள், மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்