< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசையையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
26 Sept 2022 12:15 AM IST

மகாளய அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர்‌ பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பரமத்திவேலூர் மகா மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பேட்டை பகவதியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகுநாச்சியம்மன், பாண்டமங்கலம் மாசாணியம்மன், பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் அம்மன்களுக்கு ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்